நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட எமில்டன் பிரிவில் 15, 14 மற்றும் 13 வயதுடைய சிறுவர்கள் காணாமல் போயுள்ளனர்.

குறித்த சிறுர்களை நேற்று முதல் காணவில்லை என நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செயயப்பட்டுள்ளதாக நல்லதண்ணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

இவ்வாறு காணாமல் போனவர்கள் நடராஜா நிலூக்ஷன் வயது 15,யோகராஜன் திவாகர் வயது 13, ராஜா சன்தூர் வயது 14 எனவும், குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இவர்கள் மூவரும் நீர் குழாய் ஒன்றை உடைத்து விட்டதால் வீட்டார் திட்டுவார்கள் என்ற பீதியில் பாடசாலை சொல்வதாக கூறி நேற்று வீட்டை விட்டு வெளியேறிச் சென்று உள்ளனர்.

இவர்களை கண்டால் அறுகில் உள்ள பொலிஸ் நிலையத்தில் தெரிவிக்குமாறு பொலிஸார் மற்றும் பெற்றோர் கேட்டுக் கொண்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version