யுத்த நிறுத்தம் நடைமுறைக்கு வரும் வரை பணயக்கைதிகள் எவரையும் விடுதலை செய்யப்போவதில்லை என ரஸ்யாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஹமாஸ் பிரநிதிகள் தெரிவித்துள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட அனைவரும் எங்கிருக்கின்றார்கள் என்பதை கண்டுபிடிப்பதற்கு காலம் தேவை என ஹமாஸ் பிரதிநிதியொருவர் ரஸ்ய ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.
ஹமாஸ் உறுப்பினர்கள் பெருமளவானவர்களை கைதுசெய்தனர் அவர்களை காசா பள்ளத்தாக்கில் தேடிக்கண்டுபிடித்துவிடுதலை செய்வதற்கு கால அவகாசம் தேவை என ஹமாஸ் பிரதிநிதி தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகள் குறித்த விவகாரத்திற்கு தீர்வை காண்பது குறித்த பேச்சுக்களிற்காக ஹமாசின் பிரதிநிதிகள் குழுவினர் மொஸ்கோவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளனர்.
ஹமாஸ்பிரதிநிதிகளின் விஜயத்தினை ரஸ்யா உறுதி செய்துள்ளது.
நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக முக்கிய தரப்பினருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளதாக மொஸ்கோ தெரிவித்துள்ளது.
ஹமாசை ரஸ்யா தடைசெய்யவில்லை என்பதுடன் ஹமாஸ் உறுப்பினர்கள் ரஸ்யாவிற்கு பயணங்களை மேற்கொள்வது வழமையான விடயம் எனினும் 7ம் திகதிக்கு பின்னர் ஹமாஸ் பிரதிநிதிகள் ரஸ்யாவிற்கு மேற்கொண்டுள்ள முதலாவது விஜயம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
டோகாவில் வசிக்கும் ஹமாசின் சிரேஸ்ட தலைவர் ஒருவர் தலைமையிலான குழுவினரே ரஸ்யா சென்றுள்ளனர்.