“அய்யய்யோ.. எனக்கு இங்க விளையாட பயமா இருக்கு.. மிளகாய் பொடி ஊதுவேன்னு சொல்றாங்க. இனி என்னால இங்க இருக்க முடியாது”
பிரதீப்பின் ராஜதந்திர ஸ்ட்ராட்டஜியை சக போட்டியாளர்கள் உணர்ந்து மெல்ல அதை உடைக்க ஆரம்பித்திருப்பது ஆரோக்கியமான மாற்றம்.
பிரதீப் ஒரு சிறந்த ஆட்டக்காரராக முதலிடத்தில் இருந்தாலும், அவர் செய்யும் மிகையான அராஜகம்தான் சமயங்களில் எதிரியாக வந்து நின்று விடுகிறது. (வாய்.. வாய்.. வாய் மட்டும் இல்லேன்னா. நாய் தூக்கிட்டுப் போயிடும் என்கிற வசனம் பலருக்கும் நினைவுக்கு வரலாம்.).
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடிாேயவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 30-10-2023 Vijay Tv Show- Day 30
Bigg Boss 7 Day 29: `ரத்தபூமியில் எல்கேஜி பேபி’ – மோதிய பெரிய பிக் பாஸ் – சின்ன பிக் பாஸ் வீடுகள்!
வைல்டு கார்டு என்ட்ரிகளின் வரவு, முதல் நாளிலேயே எதிர்பார்த்த பலனைத் தந்து விட்டது. சலசலப்புகளும் சர்ச்சைகளும் வெற்றிகரமாகத் துவங்கி விட்டன. ‘யெஸ்.. இதைத்தான் எதிர்பார்த்தேன்’ என்று பிக் பாஸ் அகம் மகிழ்ந்திருப்பார்.
எதிரி நாடுகள் போல இரண்டு வீடுகளும் முறைத்துக் கொண்டு நிற்கின்றன. காலேஜ் ராகிங் மாதிரி புதியவர்களை பெரிய வீடு கையாள்கிறது.
‘இருங்கடா.. என் கேமைக் காட்டறேன்.. இனிமேத்தான் இந்த காளியோட ஆட்டத்தைப் பார்க்கப் போறீங்க’ என்று டபுள் கிராஸ் கேமை விசித்ரா துவங்கியிருப்பது நன்று. ‘இங்க ஏன் துணியை காய வெச்சிருக்கீங்க?’ என்று பக்கத்து வீட்டு அங்கிள் மாதிரி சண்டைக்கான காரணங்களைத் தேடி ஒரு வில்லத்தனமான வைப்ரேஷனில் செட் ஆகத் துடிக்கிறார் தினேஷ். ஆனால் அர்ச்சனாவின் நிலைமைதான் பாவம்.
ரத்தபூமிக்குள் மாட்டிக் கொண்ட கான்வென்ட் பேபி மாதிரி கண்ணீர் சிந்திக் கொண்டேயிருக்கிறார். வீட்டில் நிறைய செல்லம் தந்து வளர்த்திருப்பார்கள் போல. (லேட்டா வந்தா அர்ச்சனா ஸ்வீட்டோடதான் வரணும்!)
பிக் பாஸ் வீட்டில் நடந்தது என்ன?
வீடிாேயவை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 30-10-2023 Vijay Tv Show- Day 29