ஹோமாகம பிரதேசத்தில் ஹோமாகம நீதிமன்ற வீதியில் இன்று புதன்கிழமை (08) காலை யுவதி ஒருவர் கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர் சம்பவ இடத்திலிருந்து தப்பிச்சென்று களுத்துறை நாகொட போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவரது ஆடையில் காணப்பட்ட இரத்த கறையால் சந்தேகமடைந்ந வைத்தியசாலை நிர்வாகம் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் தெஹிவளை ஆண்டர்ன் வீதியை சேர்ந்த நபர் ஆவார்.

ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 22 வயது யுவதியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

காதல் விவகாரம் தொடர்பில் கொலை சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் களுத்துறை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version