தல்துவை – மீவிடிகம்மன பிரதேசத்தில் கழுத்து வெட்டப்பட்ட நிலையில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மீவிடிகம்மன பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் தல்துவை – மீவிடிகம்மன பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒன்றரை வயது பிள்ளையின் தாயாவார்.

இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருவதாகவும் இவர் தனது பிள்ளையுடன் கணவரின் தாய் மற்றும் சகோதரனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த சம்பவத்திற்கு பின்னர் கணவரின் சகோதரன் காணாமல்போயுள்ளதாக பொலிஸார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் மீவிடிகம்மன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version