ஒரு ஆண் தனது காதலி மீது வைத்திருக்கும் அன்பையும், ஒரு பெண் காதலன் மீது வைத்துள்ள அன்பையும் பல்வேறு விதத்தில் வெளிப்படுத்தி வருவதுண்டு. சிலர் மக்கள் கூடியிருக்கும் பொது நிகழ்ச்சி நடைபெறும் இடம், விளையாட்டு மைதானம் உள்ளிட்ட சிறப்பு வாய்ந்த இடம், சிலர் விமான பயணத்தின்போது கூடஅன்பை வெளிப்படுத்துவார்கள்.

தற்போதைய நவீன காலத்தில் செல்போன் மெசேஜ் உள்ளிட்டவைகள் மூலமும் கவரும் வகையில் அன்பை வெளிப்படுத்துவார்கள். உடலில் பல இடங்களிலும் பச்சைக்குத்துவதும் உண்டு.

ஆனால், இங்கிலாந்தை சேர்ந்த பெண் ஒருவர், தனது காதலன் பெயரை நெற்றியில் பச்சைக்குத்தியுள்ளார். இது தொடர்பான வீடியோவை அந்த பிரபலம் அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதுதொடர்பாக நேர்மறை விமர்சனங்களும், எதிர்மறை விமர்சனங்களும் எழுப்பப்பட்டு வருகின்றன. ஒருவர் இது போலியானது எனத் தெரிவித்துள்ளார்.

ஆனால், அனா ஸ்டான்ஸ்கோவ்ஸ்கி வீடியோவிற்கு கீழ் “எனது முகத்தில் ஆண் நண்பரின் பெயரை பெற்றுள்ளேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

“இது அந்த பெண் பின்தொடர்பவர்களை அதிகரிக்கச் செய்யவும், டாட்டூ கலைஞர் தன்னை பிரபலப்படுத்திக் கொள்ளவும் செய்யும் முயற்சி” எனத் தெரிவித்துள்ளார்.

மற்றொருவர் “டாட்டூ மெஷினில் ஊசி இல்லை எனவும், இது பிராங்க் வீடியோ. ரத்தம் வரவில்லை. அந்த இடம் சிகப்பாக மாறவில்லை” எனத் தெரிவித்துளள்ளார்.

இன்னொருவர் “அதை யாரும் உங்களிடம் சொல்லவில்லையா? உங்கள் காதலரின் பெயரை உங்கள் உடலில் வைத்தால். நீங்கள் பிரிந்து விடுவீர்கள், அது உண்மை” என பதிவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version