நல்லூர் கந்தசாமி தேவஸ்தானத்தின் சர்வாலயதீப திருக்கார்த்திகை உற்சவத்தின் சொக்கப்பனை எரிக்கும் உற்சவம் நேற்று (26) மாலை இடம்பெற்றது.

அலங்காரக்கந்தன், வள்ளி, தெய்வானை ஆகிய தெய்வங்களுக்கு விஷேட அபிஷேக ஆராதனைகள் இடம்பெற்று, வசந்த மண்டபத்தில் இருந்து எழுந்தருளிய மூர்த்திகள் திருக்கைலாய வாகனத்தின் ஊடாக வெளிவீதி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த உற்சவத்தினை ஆலய பிரதம குரு சிவசிறி வைகுந்தன் குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நடாத்தி வைத்தனர்.

இந்த நிகழ்வினை கண்டுகளிக்க நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் வருகைதந்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version