இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலையில் திருத்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனம் தெரிவிக்கின்றது.

இதன்படி,

ஒக்டேன் 92 – 10 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 346 ரூபாவாகும்.

ஒக்டேன் 95 – 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 426 ரூபாவாகும்.

லங்கா டீசல் 27 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 329 ரூபாவாகும்.

சுப்பர் டீசல் – 3 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 434 ரூபாவாகும்.

மண்ணெண்ணெய் ஒரு லீட்டர் 2 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலையாக 247 ரூபா நிர்ணாயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இலங்கை பெற்றோலிய கூட்டுதாபனத்தின் விலை திருத்தத்திற்கு அமைய தமது நிறுவனங்களும் விலை திருத்தத்தை மேற்கொள்வதாக லங்கா IOC மற்றும் சினொபெக் நிறுவனங்கள் குறிப்பிடுகின்றன.

 

Share.
Leave A Reply

Exit mobile version