யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் – அராலி, கல்லுண்டாய் வெளி பகுதியில் நேற்றைய தினம் (29) மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.

குறித்த விபத்தில் வட்டுக்கோட்டை பகுதியை சேர்ந்த , யாழ். போதனா வைத்திய சாலை தாதிய உத்தியோகஸ்தரான மகேஸ்வரன் மயூரன் (37) மற்றும் அவருடன் பயணித்த ஜெயசுந்தரம் சரோஜன் (29) ஆகிய இருவரும் உயிரிழந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version