போலி விசாவைப் பயன்படுத்தி இத்தாலிக்குச் செல்ல முயன்ற இரண்டு இலங்கைப் பெண்கள் கட்டுநாயக்க விமான நிலைய குடிவரவு எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகள் குழுவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களில் ஒருவர் கிளிநொச்சி பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பெண். மற்றைய யுவதி யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 26 வயதுடையவராவார்.

இவர்கள் இருவரும் சமர்ப்பித்த ஆவணங்களில் சந்தேகமடைந்த கத்தார் ஏர்வேஸ் அதிகாரிகள், இருவரையும் விமான நிலைய குடிவரவு மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டு பிரிவு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு நடத்தப்பட்ட விசாரணையில், இந்த இத்தாலிய விசாக்கள் போலியான தகவல்களைக் கொண்டு தயாரிக்கப்பட்டவை என்பது தெரியவந்தது.

Virakesari

Share.
Leave A Reply

Exit mobile version