இந்தோனேசியாவின் மெராபி எரிமலை வெடித்து சிதறியதில் 11 மலையேறும் வீரர்கள் உயிரிழந்துள்ளதோடு, 12 பேரை காணவில்லை என உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேற்கு சுமாத்ரா தீவிலுள்ள மெராபி எரிமலை ஞாயிற்றுக்கிழமை வெடித்து சிதறிய போது 75 பேர் அப்பகுதியில் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியிலிருந்து வெளியேற முடியாமல் இருந்த 26 பேரில் 14 பேரை மீட்கப்பட்டபோது மூன்று பேர் உயிருடன் இருந்ததோடு, 11 பேர் உயிரிழந்துள்ளதாக படாங் தேடல் மற்றும் மீட்பு முகாமைத்துவத்தின் தலைவர் அப்துல் மாலிக் தெரிவித்துள்ளார்.

எரிமலை தொடர்ந்து வெடித்த வண்ண உள்ளமையினால் இன்று திங்கட்கிழமை மீட்பு நடவடிக்கைகளை இடைநிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

இந்தோனேசியா பசிபிக் நெருப்பு வளையம் என்று அழைக்கப்படும் எரிமலைகள் நிரம்பிய பகுதியில் உள்ளது. அங்கு சிறியதும் பெரியதுமான 127 க்கும் மேற்பட்ட எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 2,891 மீட்டர் (சுமார் 9,500 அடி) உயரம் கொண்ட மெராபி எரிமலையும் அடங்கும்.

 

Share.
Leave A Reply

Exit mobile version