“மைண்ட்ல இருக்கறதுதானே வெளியே வரும். நான் வீட்டுக்குப் போகணும்” என்று கண்கலங்கத் துவங்கினார் விசித்ரா. “அழாதீங்க மேம். நான்தான் விசித்ராவை ரொம்ப ஹர்ட் பண்ணினேன்” என்று இரக்கத்துடன் வாக்குமூலம் தந்தார் அர்ச்சனா.

‘ஒரு பொம்மலாட்டம் நடக்குது, ரொம்ப புதுமையாக இருக்குது. நாலு பேரு நடுவிலே, நூலு ஒருத்தன் கையிலே’ என்றொரு திரையிசைப் பாடல் இருக்கிறது. இது பிக் பாஸ் வீட்டின் ‘வேக் அப்’ பாடல் இல்லை. இந்த ஆட்டத்தின் அடிப்படையான தத்துவமே இதுதான்.

இந்த எபிசோடில் நடந்த ‘பொம்மலாட்ட டாஸ்க்கில்’ குழந்தைகள், குழந்தைகளாக நடந்து கொள்ளாமல் உள்ளுக்குள் இருந்த குரோதங்களையும் வெளிக் கொணர்ந்ததால் சுவாரசியங்களைத் தாண்டி சில விபரீதங்களும் நிகழ்ந்தன.

Share.
Leave A Reply

Exit mobile version