பிரபல லண்டன் வார இதழான ‘ஈஸ்டர்ன் ஐ’-ல் 2023 ஆம் ஆண்டின் ஆசிய பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் பொலிவுட் நடிகர் ஷாருக்கான் முதலிடம் பிடித்துள்ளார்.

அவரின் பதான், ஜவான் என அடுத்தடுத்து 2 திரைப்படங்களின் மாபெரும் வெற்றி இதற்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளது.

இந்த பட்டியலில் நடிகை ஆலியா பட் இரண்டாவது இடம் பிடித்துள்ளார். ‘தி ஹார்ட் ஆஃப் ஸ்டோன்’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹொலிவுட்டில் அறிமுகமான ஆலியா பட், வெளிநாட்டு ரசிகர்கள் மனதையும் வென்றுள்ளார்.

நடப்பாண்டில் ‘சிட்டடெல்’, ‘லவ் அகெய்ன்’ ஆகிய திரைப்படங்களில் நடித்த பிரியங்கா சோப்ரா மூன்றாவது இடம் பிடித்துள்ளார்.

இப்பட்டியலில், 8-வது இடத்தில் தமிழ் திரைப்பட நடிகர் விஜய் உள்ளார்.

முதல் 10 இடங்களில் இடம்பெற்றவர்களில் விஜய் மட்டுமே தென்னிந்தியாவைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version