தனியார் பயணிகள் பஸ் ஒன்று காட்டு யானையுடன் மோதியதில் வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

 

இப்பலோகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட  மகஇலுப்பள்ளம விதை ஆராய்ச்சி நிலையத்துக்கு  அருகில் இன்று (24) அதிகாலை 5.20 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

கெக்கிராவையிலிருந்து அநுராதபுரம் நோக்கி பயணித்த பயணிகள் பஸ்ஸே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விதை ஆராய்ச்சி நிறுவன வளாகத்தில் தங்கியிருந்த காட்டு யானை மீண்டும் வனப்பகுதிக்கு செல்வதற்காக வேலியை உடைத்துக்கொண்டு வீதிக்கு வந்தபோது இந்த பஸ் மோதி கட்டுப்பாட்டை இழந்த நிலையில் மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

இந்தச் சம்பவத்தில் சாரதி, நடத்துனர் உட்பட 4 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இப்பலோகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version