யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மாணவி ஒருவர் திடீர் காய்ச்சல் காரணமாக நேற்று சனிக்கிழமை (23) உயிரிழந்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக கலைப்பீடத்தில் இறுதி ஆண்டில் கல்வி கற்கும் மாணவியே உயிரிழந்தவர் ஆவார்.

காய்ச்சல் காரணமாக தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட மாணவி, மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.

அதை தொடர்ந்து, உடற்கூற்று பரிசோதனைக்குப் பின்னர் மாணவியின் மரணத்துக்கான காரணம் தெரியவரும் என வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version