பொலன்னறுவையில் இருந்து மட்டக்களப்பு நோக்கி வந்துகொண்டிருந்த டிப்பர் ரக கூலர் வாகனமொன்று இன்றைய தினம் (24) விபத்தில் சிக்கியுள்ளது.
இன்று நண்பகல் மன்னம்பிட்டியில் உள்ள பாலத்துக்கருகில் வைத்து வாகனத்தின் டயர் வெடித்ததில் பாலத்துக்குள் குடைசாய்ந்துள்ளது.
இவ்விபத்து காரணமாக இந்த பாலத்தின் ஊடான வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டதையடுத்து, இது தொடர்பிலான மேலதிக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.