இஸ்ரேலிய தாக்குதல்களால் பாலஸ்தீன சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் இறந்தமை குறித்து ஆழ்ந்த கவலையை கொண்டுள்ள பாலஸ்தீன கலைஞர் ராணா பிஷாரா, நத்தார் பண்டிகைக்காக குழந்தை இயேசுவின் சிலையைப் பயன்படுத்தி ஒரு புதிய கலைப்படைப்பை வெளியிட்டுள்ளார்.
ராணாவின் கலைப்படைப்பு குழந்தை இயேசுவை இன்குபேட்டரில் காட்டுகிறது.
இன்குபேட்டரில் குழந்தை இயேசு வைக்கப்பட்டுள்ளதை காட்டும் இந்த கலைப்படைப்பை பெத்லஹேம் தேவாலயத்தின் முன் காணலாம்.
குழந்தை இயேசு பெத்லகேமில் பிறந்தார். பெத்லகேம் இன்று பெரும்பாலான பாலஸ்தீனியர்கள் வாழும் மேற்குக் கரைக்கு சொந்தமானது.
அத்துடன், பாலஸ்தீனியர்கள் காசா பகுதியில் வசிக்கின்றனர். காசா பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹமாஸ் மற்றும் இஸ்ரேலியப் படைகளுக்கு இடையே போர் நடந்து வருகிறது.
காசா பகுதியில் உள்ள மருத்துவமனைகள் மீது இஸ்ரேல் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
காசாவிலுள்ள அனைத்து மருத்துவமனைகளும் தாக்குதல்களால் முடங்கியதாக கூறப்படுகிறது.
வான்வழித் தாக்குதல்களுக்கு நடுவே, மருத்துவமனைகளில் குறைப்பிரசவமான குழந்தைகள் இன்குபேட்டர்கள் இன்றி எகிப்தில் உள்ள மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.