உடப்பு, புனவிட்டியவில் உள்ள பிரபல தேங்காய் மற்றும் இறால் பண்ணை உரிமையாளரான தொழிலதிபர் ஒருவரின் வீட்டில் இன்று திங்கட்கிழமை (25) அதிகாலை திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நேற்று 24 ஆம் திகதி இரவு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தவர் திங்கட்கிழமை காலை வீடு திரும்பியபோது, தங்கம் உள்ளிட்ட பொருட்கள் திருடப்பட்டிருப்பதைக் கண்டதனையடுத்து இது தொடர்பில் பொலிஸாருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

சுமார் 7 மில்லியன் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் என்பன திருடப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

இந்தத் திருட்டில் ஈடுபட்ட நபர்கள் ஜன்னலை உடைத்து வீட்டுக்குள் நுழைந்ததாக சந்தேகிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை உடப்பு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். ”யுக்திய’ சுற்றிவளைப்பு”?

Share.
Leave A Reply

Exit mobile version