சட்டவிரோதமான முறையில் கடல் மார்க்கமாக பிரான்சுக்கு குடிபெயர்ந்த இலங்கை பிரஜைகள் குழுவை பிரான்சில் உள்ள ரீயூனியன் தீவு அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் ரீயூனியன் தீவிற்கு குடிபெயர்ந்த பல இலங்கையர்கள் மீள்குடியேற்றப்பட்ட குழுவில் அங்கம் வகித்ததாக கடற்படை தெரிவித்துள்ளது.

அவர்களில், 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 7 ஆம் திகதி IMUL-A-0813-KLT என்ற பல நாள் மீன்பிடி இழுவைக் கப்பலில் இடம்பெயர்ந்த ஏழு நபர்கள், ஒகஸ்ட் 22, 2022 அன்று IMUL-A-0469-NBO என்ற பல நாள் மீன்பிடி இழுவைக் கப்பலில் இருந்த இரு நபர்கள், 2018 இல் IMUL-A-0014-CBO என்ற பல நாள் மீன்பிடி இழுவை படகில் இருந்த மூன்று நபர்களும், 2019 இல் இந்தோனேசியாவிலிருந்து குடிபெயர்ந்த இரண்டு நபர்களும் உள்ளடங்குகின்றனர்.

குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் மற்றும் பொலிஸார் இந்த சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ரீயூனியன் தீவிற்குள் சட்டவிரோதமாக பிரவேசிக்கும் நபர்களை பிரான்ஸ் அரசாங்கம் உடனடியாக திருப்பி அனுப்புவதாக இலங்கை கடற்படை வலியுறுத்தியுள்ளது. கடல் வழியாக மனித கடத்தல்காரர்களால் எளிதாக்கப்படும் சட்டவிரோத குடியேற்றங்களில் பங்கேற்பதையோ அல்லது ஆதரவளிப்பதையோ தவிர்க்குமாறு பொதுமக்களை கடற்படையினர் கேட்டுக்கொள்கிறார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version