புது டெல்லியில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு அருகே நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாலை குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது.

நடந்த வெடிவிபத்தில் தூதரக ஊழியர்கள் எவருக்கும் எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் இஸ்ரேலிய தூதரக செய்தித் தொடர்பாளர் கைநிர்,’ இஸ்ரேல் தூதரகத்திற்கு அருகாமையில் மாலை 5:48 மணியளவில் குண்டுவெடிப்பு ஏற்பட்டது என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்.டெல்லி பொலிஸார் மற்றும் பாதுகாப்புக் குழுவினர் நிலைமையை இன்னும் ஆராய்ந்து வருகின்றனர்’ என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், தூதரகத்திலிருந்து சில மீட்டர் தொலைவில் உள்ள இடத்தில், இஸ்ரேலிய தூதருக்கு ஒரு கடிதத்தை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். மேலும் கடிதம் சுற்றப்பட்ட கொடியையும் கண்டெடுத்துள்ளனர். இதையடுத்து அந்த கடிதத்தை பொலிஸார் கைப்பற்றி தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இஸ்ரேல் தூதரகம் மற்றும் அதனை சுற்றிய இடங்களில் பொலிஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு நடந்த இடத்திற்கு அருகில் உள்ள சிசிடிவி கமராவில் இரண்டு சந்தேக நபர்கள் சிக்கியுள்ளதோடு, அவர்களின் நடமாட்டத்தைக் கண்காணித்து அவர்களைக் கைது செய்வதற்கான முயற்சிகளை டெல்லி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share.
Leave A Reply

Exit mobile version