lவாஷிங்டன்: அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மாணவியை காரை ஏற்றி கொலை செய்ததாக காவலர் பணி நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்.
அதிவேகமாக கார் மோதியதில் 100 அடி தூரத்திற்கும் மேல் மாணவி தூக்கி வீசப்பட்ட நிலையில் அந்த போலீஸ் அதிகாரி கேலியாக சிரித்ததாக பகீர் புகார் எழுந்துள்ளது.
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கல்லூரி படிப்பை முடித்த இளம் பெண்ணான ஜான்வி கண்டுலா உயர் படிப்புக்காக அமெரிக்கா சென்றார்.
அங்கு வாஷிங்டன் அருகே சியாட்டில் தங்கி பல்கலைக்கழகத்தில் உயர்கல்வி படித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் சியாட்டில் சாலையை கடக்க முயன்ற போது விபத்தில் ஜான்வி உயிரிழந்தார்.
இந்த நிலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறை வாகனம் மோதி ஜான்வி உயிரிழந்ததாக தகவல் வெளியானது.
சுமார் 120 கிலோமீட்டர் வேகத்தில் அதிவேகமாக அந்த கார் ஜான்வி மீது மோதியதாகவும் அதில் 100 அடி உயரத்திற்கு அவர் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தது தெரிய வந்தது.
இந்த நிலையில் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் காரை ஓட்டியது கெவின்டே என்ற காவல் அதிகாரி என்பதும் அவருடன் டானியல் என்ற காவல் அதிகாரி பயணித்ததும் தெரிய வந்தது.
இந்த நிலையில் டேனியல் தனது உயர் அதிகாரியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அந்த பெண்ணை நான் இடித்து விட்டேன் பல மீட்டர் தூரம் பறந்து சென்று அவர் விழுந்து விட்டார் என சிரித்தபடியே தகவல் அளித்துள்ளார்.
இந்த நிலையில் அவரது யூனிஃபார்மில் பொருத்தப்பட்டிருந்த கேமரா இந்த காட்சிகளை படம் பிடித்த நிலையில் சமூக வலைதளங்களில் வெளியாகி பலத்த எதிர்ப்பை சந்தித்தது.
மாணவியின் மரணத்திற்கு நீதி கேட்டும் காவலர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்தியர்கள் அமெரிக்காவில் போராட்டத்தில் குதித்தனார்.
மேலும் மாணவி உயிரிழந்ததற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்காவில் இருக்கும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த எம்பிகளும் அரசை வலியுறுத்தினர்.
இந்த நிலையில் மாணவியின் சாவு குறித்து கேலியாக சிரித்து பேசிய டேனியல் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
இந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய கெவின்டேவை பணி நீக்கம் செய்து சியாட் காவல் துறை உத்தரவிட்டுள்ளது.
மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்யும் நடவடிக்கையும் காவல்துறை எடுத்துள்ளது.
இரண்டு ஆண்டுகள் ஆனாலும் மாணவியின் மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில் காவலர்கள் மீது நடவடிக்கை எடுத்த காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு அமெரிக்காவை சேர்ந்த இந்திய வம்சாவளியினர் நன்றி தெரிவித்துள்ளனர்.