கான்பூர்: கணவரையும், 6 குழந்தைகளையும் விட்டுவிட்டு, பிச்சைக்காரனுடன் ஓடிவிட்டாராம் மனைவி.. இதையடுத்து, தன்னுடைய மனைவியை கண்டுபிடித்து தரும்படி, பெண்ணின் கணவர் போலீசில் புகார் தந்துள்ள சம்பவம் மிகவும் பரபரப்பை தந்து வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் ஹர்தோய் மாவட்டம் ஹர்பால்பூர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜு.. இவருக்கு 45 வயதாகிறது.. இவரது மனைவி பெயர் ராஜேஸ்வரி.. 36 வயதாகிறது.. இந்த தம்பதிகளுக்கு 6 குழந்தைகள் இருக்கிறார்கள்.

போலீசில் புகார்: இந்நிலையில், கடந்த 3-ம் தேதி வீட்டை விட்டுசென்ற ராஜேஸ்வரி, அதன்பின் வீட்டுக்கு திரும்பி வரவேயில்லையாம்.. தன்னுடைய மனைவியை பல இடங்களில் அலைந்து திரிந்து தேடினார் கணவர்..

ஆனால், எங்குமே மனைவி கிடைக்காத நிலையில், போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று புகார் தந்தார். பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவின் கீழ் இந்த புகாரை அவர் அளித்திருந்தார்.

அந்த புகார் மனுவில் அவர் கூறியிருப்பதாவது: “நான்ஹே பண்டிட் (வயது 45) என்ற பிச்சைக்காரர், சில சமயம் பக்கத்து வீடுகளில் பிச்சை எடுக்க வருவது வழக்கம். அப்போது என்னுடைய மனைவி ராஜேஸ்வரிக்கும், அந்த பிச்சைக்காரருக்கும் பழக்கம் ஏற்பட்டது. 2 பேரும் அடிக்கடி தொடர்பு கொண்டு பேசுவார்கள்.

திடீர் மாயம்: கடந்த 3-ம் தேதி பிற்பகல் 2 மணியளவில் என்னுடைய மனைவி ராஜேஸ்வரி, மார்க்கெட்டுக்கு சென்று துணிகள், காய்கறிகள் வாங்கி வருவதாக என்னுடைய மகளிடம் சொல்லிவிட்டு சென்றிருக்கிறார்.

ஆனால் அதற்கு பிறகு அவர் வீட்டுக்கு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் என்னால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

எருமை மாட்டை விற்று, அந்த காசை வீட்டில் வைத்திருந்தேன்.. அந்த பணத்துடன் என் மனைவி வீட்டை விட்டு சென்றுவிட்டார்.

அவரை அந்த பிச்சைக்கரர் நான்ஹே பண்டிட் அழைத்து சென்றிருக்கலாம் என்று சந்தேகம் உள்ளது. எனவே, போலீசார் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

பெண் மீட்பு: இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான பெண்ணை தேடும் பணியை துவங்கினர்.. இறுதியில் அந்த பெண்ணை கண்டுபிடித்து மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து வந்தனர்.. அவரிடம் விசாரணை மேற்கொண்டு, அவரது வாக்குமூலத்தையும் பதிவு செய்தனர். ஆனால் அவரை கடத்தி சென்றதாக கூறப்படும் பிச்சைக்காரர் நான்ஹே பண்டிட்டை காணவில்லையாம்.. அவரையும் போலீசார் தீவிரமாக தேடி கொண்டிருக்கிறார்கள்..!!!

 

Share.
Leave A Reply

Exit mobile version