“தே.மு.தி.க. தலைவரும், நிறுவனருமான விஜயகாந்த் நேற்று முன்தினம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காலமானார் தகவலை மருத்துவமனை அறிவித்ததும், அவரது உடல் உடனடியாக சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு வரப்பட்டது.

விஜயகாந்த் காலமானார் செய்தியை அறிந்து அவரது கட்சி தொண்டர்கள், ரசிகர்கள் வீட்டிலும், தேமுதிக தலைமை அலுவலகத்திலும் குவிந்தனர். விஜயகாந்த் உடல் தேமுதிக அலுவலத்திற்கு கொண்டு வருவதற்கு முன், அவரது வீட்டில் சிறிது நேரம் வைக்கப்பட்டது.

அப்போது தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவரது இல்லத்திற்கு வருகை தந்து, அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். அப்போது அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடனிருந்தார்.”,

 

Share.
Leave A Reply

Exit mobile version