லெபனானின் தெற்கு பெய்ரூட்டில் நடந்த தாக்குதலில் ஹமாஸ் அமைப்பின் துணைத் தலைவர் சலே அல்-அரூரி கொல்லப்பட்டார்.

லெபனானை இலக்கு வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தவில்லை என்றும், இந்த கொலை ஒரு தந்திரோபாய நடவடிக்கை என்றும் வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், ஹமாஸ் அலுவலகத்தை குறிவைத்து நடத்தப்பட்ட ஆளில்லா விமான தாக்குதலில் ஹமாஸ் துணைத் தலைவர் கொல்லப்பட்டதாக லெபனான் அதிகாரிகள் கூறுகின்றனர்.

ஹமாஸ் அதிகாரிகளுக்கும் லெபனான் சுன்னி முஸ்லிம் குழுவிற்கும் இடையிலான சந்திப்பின் போது இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது. அங்கு நான்கு பாலஸ்தீனியர்களும் மூன்று லெபனானியர்களும் உயிரிழந்துள்ளனர்.

லெபனான், அதன் மக்கள், அதன் பாதுகாப்பு, இறையாண்மை மற்றும் அரசியல் ஆகியவற்றின் மீதான கடுமையான தாக்குதல் என்று கூறிய ஹமாஸ் இந்த மரணத்தை கண்டித்துள்ளது.
மேலும், லெபனானை மோதலுக்கு இழுக்க இஸ்ரேல் முயற்சிப்பதாக லெபனான் பிரதமர் குற்றம்சாட்டியுள்ளார். கொல்லப்பட்ட 57 வயதான அரோரி, இஸ்ரேலுடன் போருக்குச் சென்ற மிக மூத்த ஹமாஸ் உறுப்பினர் ஆவார்.

Share.
Leave A Reply

Exit mobile version