ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் யமனொட்டேயில்புகையிரதத்தில் பயணிகள் மீது கூரான கத்தியால் தாக்குதலை மேற்கொண்டபெண்ணொருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

ஒக்காசிமாச்சி அகிகபரா புகையிரத நிலையங்களிற்கு இடையில் பயணித்துக்கொண்டிருந்த புகையிரத்தில் பெண் ஒருவர் பயணிகளை தாக்கியுள்ளார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நால்வர் காயமடைந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் போது அந்த பெண் பயணிகளை கொலைசெய்யமுயன்றதாக தெரிவித்துள்ளார்.

நான் அவர்களை கொலைசெய்யும் நோக்கத்துடனேயே கத்தியால்குத்தினேன் என அந்த பெண் தெரிவித்துள்ளார்.

15 சென்டிமீற்றர் நீளமான கத்தியால் அவர் பயணிகளை தாக்கினார்அவரிடமிருந்து மேலும்ஒரு கத்தியையும்பொலிஸார் மீட்டுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version