யாழ்.உடுத்துறை பகுதியிலுள்ள, அரசடி முருகன் கோயில் அருகே மர்மப் பொருளொன்று சற்றுமுன் கரையொதுங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த மர்மப் பொருளை பார்வையிடுவதற்கு ஏராளமான மக்கள் அங்கு வருகை தருவதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த பொருளில் Asia 2 எனக் குறிப்பிடப்பட்டுள்ளதால், ஏதாவது கப்பலில் இருந்து குறித்த பொருள் தவறி விழுந்து கரையொதுங்கியிருக்கலாமென பொலிஸாரினால் சந்தேகிக்கப்படுகின்றது.

அண்மைக்காலமாக உடுத்துறை, வேம்படி, நாகர்கோவில் ஆகிய பகுதிகளில் பல்வேறு விதமான மர்ம பொருட்கள் கரையொதுங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version