யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் அருகில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் மூன்று பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் யாழ்ப்பாண விஜயத்தை முன்னிட்டு பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாண மாவட்ட செயலக வளாகம் சுற்றியுள்ள பகுதிகள் வீதிகளில் வீதித்தடைகள் கொண்டுவரப்பட்டு முழுமையாக பொலிஸார், விசேட அதிரடிப் படையினர் கலகமடக்கும் படையினர் மற்றும் இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

வியாழக்கிழமை (04)உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் வருகைதரும் ஜனாதிபதி மாலை 3 மணி முதல் 5.30 வரை யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களின் அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பங்குகொள்கின்றார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version