சுவீடனில் 24 மணித்தியாலத்திற்கு மேலாக பொழிந்த கடும் பனியினால் ஸ்கேன் பகுதியில் உள்ள E22 பிரதான வீதியில் 1000 வாகனங்கள் சிக்கியுள்ளன.

சுவீடனில் செவ்வாய்க்கிழமை கடும் குளிரினால் வெப்பநிலை -40 டிகிரி செல்சியஸிற்கும் கீழ் வெப்பநிலை குறைந்துள்ளது.

ஹார்பி மற்றும் கிறிஸ்டியான்ஸ்டாட் இடையே இரு திசைகளிலும் பனி சூழ்ந்ததால் புதன்கிழமை அந்நாட்டு உள்ளூர் நேரப்படி காலை 9.00 மணிக்கு E22 பிரதான வீதியூடான போக்குவரத்து தடைப்பட்டது.

இந்நிலையில், E22 பிரதான வீதியில் காரில் சிக்கி இருந்தவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளதாகவும், வியாழக்கிழமை காலை வரை லொறி சாரதிகள் மட்டுமே தங்கள் வாகனங்களில் இருந்ததாகவும் அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சுமார் 180 வாகனங்களை விடுவிக்க இன்னும் முயற்சி செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஐரோப்பாவில் கடும் பனி பொழிவால் நோர்டிக் நாடுகளில் வெப்பநிலை குறைந்துள்ளது.

இதன் காரணமாக சுவீடன், பின்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் கடுமையான குளிர் வானிலையால் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், புதன் கிழமை முதல் டென்மார்க்கில் பனிப்புயலால் ஆர்ஹஸ் அருகே உள்ள அதிவேக வீதியில் வாகனங்கள் சிக்கியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version