ஒரே படுக்கையில் ஆறு மனைவிகளுடன் ஒன்றாக உறங்க முடியவில்லை என்பதனால், 81 இலட்சம் ரூபாய் செலவில் 20 அடி நீள படுக்கை தயாரிக்கப்பட்டுள்ள சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பிலான புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளன. இந்த பிரமாண்டமான படுக்கையை உருவாக்க 12 தொழிலாளர்கள் 15 மாதங்கள் எடுத்துக்கொண்டனர்.

பிரேசில் பிரேசில் நாட்டு சாவோ பாலைவனப் பகுதியை சேர்ந்தவர் ஆர்தர் ஓ உர்சோ( 37) இவர் 6 பெண்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வருகிறார்.

இவர் சமீபத்தில் 51 வயதான ஒலிண்டா மரியா என்ற மணந்தார். இதற்கு முன்னதாக லுவானா கசாகி (27), எமிலி சோசா (21), வால்கேரியா சாண்டோஸ் (24), டாமியானா (23), மற்றும் அமண்டா அல்புகெர்கி (28) ஆகியோரை திருமணம் செய்து இருந்தார்.

ஒவ்வொரு மனைவியும் ஒரு குழந்தையைப் பெற்றெடுக்க விரும்புவதாக ஆர்தர் கூறினார். 6 மனைவிகளுடன் ஒன்றாக படுக்கையை பகிர்ந்து கொள்ள முடியவில்லை என்று அவருக்கு மிகப்பெரிய கவலை. படுக்கை சிறியதாக இருந்ததால் அதில் 3 பேருக்கு மேல் படுக்க முடியவில்லை.

இதனால் ஆர்தர் ஓ உர்சோ சமீபத்தில் ரூ. 81 இலட்சம் செலவில் 20 அடி நீள படுக்கையை தயாரித்து உள்ளார்.

அவரது ஆசை தற்போது நிறைவேறியுள்ளது. இதுகுறித்து ஆர்தர் என் வாழ்வில் அங்கம் வகிக்கும் பெண்கள் தற்போது நிம்மதி அடைந்துள்ளனர் என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். உலகின் மிகப்பெரிய படுக்கை கட்டப்பட்டுள்ளது. ஆர்தர் கின்னஸ் சாதனையில் பெறுவார் என்றும் குறிப்பிட்டு உள்ளார்.

ஆர்தர் மற்றும் அவரது முதல் மனைவி லுவானா 2021 இல் திருமணம் செய்து கொள்ணடார். கத்தோலிக்க திருச்சபையில் மற்ற பெண்களுடன் திருமணம் சட்டப்பூர்வமாக்கப்பட்டது இருப்பினும், நாட்டில் பலதார மணம் சட்டவிரோதமானது என்பதால் இதற்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் இல்லை.

ஆர்தருக்கு ஒன்பது மனைவிகள் இருந்தனர், ஆனால் கடந்த ஆண்டு மூவரை விவாகரத்து செய்து விட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version