இலங்கையின் 76வது சுதந்திர தின நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கிளிநொச்சியில் இன்று (04) மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை தடுக்கும் வகையில் பொலிஸார் தயார் நிலையில நிறுத்தப்பட்டிருந்தனர்.
யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தினம் ‘கரி நாள்’ என்ற கருத்தில் கிளிநொச்சியில் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.
அத்தோடு நீர்த்தாரை பிரயோக வாகனம் உள்ளிட்டவற்றுடன் அதிகளவான பொலிஸார் வீதி வழியே நிறுத்தப்பட்டுள்ளனர்.