சுதந்திர தினத்தை கரி நாளாக நினைவுகூரும் வகையில் இன்று (04) யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

இலங்கையின் 76வது சுதந்திர தினத்தை தமிழர் பிரதேசங்களில் கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது.

இந்நிலையில், யாழ்ப்பாண பல்கலைக்கழக கொடிகம்பத்தில் மாணவர்களால் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளதுடன், பல்கலைக்கழக சுழலில் கறுப்புக்கொடிகள் கட்டப்பட்டுள்ளன.

இன்று நாடளாவிய ரீதியில் 76வது சுதந்திர தினம் அனுஷ்டிக்கப்படுகிறது.

இந்த சுதந்திர தினத்தை கரி நாளாக வலியுறுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் பேரணி முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version