யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை நிரோஷா, லால் சலாம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார்.

அக்கா ரொம்ப திட்டுவாங்க ஆனாலும் என்க்கு வழிகாட்டி அவங்கதான் நான் அவரின் தீவிரமாக ரசிகை என்று நடிகையும் நடிகர் ராம்கியின் மனைவியுமான நிரோஷா தெரிவித்துள்ளார்.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தயாராகியுள்ள லால் சலாம் படம் நாளை வெளியாக உள்ளது. விக்ராந்த், விஷ்ணு விஷால் இணைந்து நடித்துள்ள இந்த படத்தில் ரஜினிகாந்த் கேமியோ ரோலில் நடித்துள்ளார். அவருக்கு மனைவியாக நடிகை நிரோஷா நடித்துள்ளார்.

லால் சலாம் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், படத்தில் நடித்த நட்சத்திரங்கள் ப்ரமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்த வகையில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி கொடுத்த நடிகை நிரோஷா, லால் சலாம் படத்தில் நடித்த அனுபவம் குறித்து பேசியுள்ளார். இந்த படத்தில் நடிக்க இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் என்னை கேட்டபோது சாராதண ரோலாக இருக்கும் என்று ஒப்புக்கொண்டேன். பிறகு அப்பாவுக்கு ஜோடியாக நடிக்கிறீங்க என்று அவர் சொன்னபோது, எனக்கே இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அதன்பிறகு படப்பிடிப்பு சென்ற நான், லால் சலாம் படத்தில் நடிக்கிறேன் என்று வீட்டில் சொன்னேன். ஆனால் ரஜினி சார்க்கு ஜோடியாக நடிக்கிறேன் என்று நான் சொல்லவில்லை.

ஐஸ்வர்யாவும் வெளியில் சொல்ல வேண்டாம். இந்த விஷயம் ரகசியமாக இருக்கட்டும் என்று சொன்னார். அதன்படி இருந்தது. இப்போது தான் என் கேரக்டர் பற்றி வெளியில் அறிவித்திருக்கிறார்கள்.

இந்த படத்தில் ஒரு பெரிய சீன் ஒன்று உள்ளது. அந்த சீனை கட்ஷாட்டாக எடுப்பார்கள் என்று நினைத்தேன். அதனால் பாதி வசனம் தான் படித்திருந்தேன்.

ஆனால் அந்த பெரிய சீனை ஒரே ஷாட்டில் படமாக்க முயற்சி செய்தார்கள். அப்போது என்ன செய்வது என்று தெரியாமல், இருந்தேன். அந்த நேரத்தில் ஒரு பிரேக் கிடைத்ததால், சீன் பேப்பரை பார்த்து மற்ற வசனங்களை தெரிந்துகொண்டேன்.

இந்த காட்சியில் நடித்து முடித்தவுடன், செம்ம டைமிங் என்று ரஜினி சார் என்னை பாராட்டினார். வீட்டில் என் கணவர் எனக்கு ரொம்ப சப்போர்ட்.

அவர் இல்லாமல் நான் இந்த 2-வது இன்னிங்சில் வந்திருக்க முடியாது. அவர் என்னை நிறைய மோட்டிவேஷன் செய்வார். முன்பு என் அக்கா ராதிகா செய்தார்.

இப்போது என் வீட்டுக்காரர் செய்துகொண்டிருக்கிறார், அக்கா ரொம்ப ஸ்ரிக்ட்டா இருப்பாங்க. அந்த காலத்தில் நாங்கள் ஒன்றாக நடிக்க போகும்போது மேக்கப் ரூமில், அக்கா வருவதற்கு முன் நாங்கள் மேக்கப் டேபிளில் அமர்ந்துவிடுவோம்.

அவர் வந்தால், என்ன இப்படி பண்ணிருக்க, இப்படி ஐலைனர் போட்ருக்க என்று திட்டுவார். அவங்களுக்கு பயந்துக்கிட்டே அவர் வருவதற்கு முன்பே நாங்கள் ரெடியாக வேண்டும் என்று வேலை செய்வோம்.

அப்போது ஒருநாள் என் மேக்கப் மேன், டீ அருகில் வைத்துக்கொண்டு குடித்துக்கொண்டே மேக்கப் போட்டுக்கொண்டிருந்தார். திடீரென அக்கா வந்தவுடன், மேக்கப் மேன் டீ கப்பில் தொட்டு மேக்கப் போட வந்தார்.

இதை பார்த்தவுடன் என்ன இது என்று கேட்க, எதுவும் கேட்காதீங்க விடுங்க ஷூட்டிங்கல போய் பார்த்துக்கலாம் என்று சொன்னார்.

ஆனாலும் அக்கா அக்கரையுடன் நடந்துகொள்வார். அவரை பார்த்து தான் நான் வளர்ந்தேன்.

அவரின் ரசிகை நான். நான் அறிமுகமான அக்னிநட்சத்திரம் படம் அக்கா நடிக்க வேண்டியது. ஆனால் என்னை நடிக்க சொன்னார். அவர் சொன்னபடி நடித்தேன். என் படத்திற்கு அக்காதான் டப்பிங் பேசியிருந்தாங்க என்று கூறியுள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version