தந்தைக்கும் மகனுக்கு இடையில் ஏற்பட்ட சண்டையில், தந்தையின் காதுகளில் ஒன்று துண்டாகியதுடன், மகனின் கை விரல்களில் இரண்டு விரல்கள் துண்டாகின. இந்த சம்பவம் பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

பல்லம, வில்பொத்த பிரதேசத்தில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் பின்னர் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ஏற்பட்ட சண்டையிலேயே தந்தையின் காது அறுபட்டுள்ளதாகவும், தந்தையின் தாக்குதலில் மகனின் இரண்டு விரல்கள் துண்டிக்கப்பட்டதாகவும் பல்லம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வில்பொத்த பகுதியிலுள்ள வீடொன்றில் விருந்துபசாரம் முடித்து வீடு திரும்பிய 56 வயதுடைய தந்தை உறங்கிக் கொண்டிருந்த போது மகன் தடியால் தாக்கியதாகவும் தந்தையின் ஒரு காது துண்டாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேநேரம் கண்விழித்த தந்தை, கைக்கு கிடைத்த கத்தியால் மகனைத் தாக்கினார், மகன் தாக்குதலைத் தவிர்க்க முயன்றபோது அவரது இரண்டு விரல்கள் வெட்டப்பட்டுள்ளன என்றும் அறியமுடிகின்றது.

Share.
Leave A Reply

Exit mobile version