கம்பஹா, இம்புல்கொட பகுதியில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கல பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (10) வீட்டில் வளர்க்கப்பட்ட நாய்க்கு அயலவர் ஒருவர் தீ வைத்துள்ளார்.

தீ வைத்துக் கொல்லப்பட்ட நாயின் உரிமையாளர் சம்பவம் தொடர்பில் யக்கல பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட நிலையில், சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேக நபர் ஜேர்மன் ஷெப்பர்ட் இன நாய்களை தனது வீட்டில் வைத்து வளர்க்கும் நபர் எனவும், அவரது நாய்களுடன் குறித்த நாய் தவறாக நடந்து கொண்டதாக தெரிவித்து அந்த நாய் தீயிட்டு கொளுத்தியுள்ளதாக விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.

கம்பஹா, இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த 65 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் இவர் நேற்று (12) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது .

Share.
Leave A Reply

Exit mobile version