நேற்று காதலர் தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்பட்ட நிலையில் பல திரையுலக பிரபலங்களும் காதலர் தின கொண்டாட்டம் குறித்த புகைப்படத்தை பதிவு செய்தனர் என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சமீபத்தில் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட நடிகை அமலாபால் தற்போது கர்ப்பமாக இருக்கும் நிலையில் இந்த காதலர் தினத்தை வித்தியாசமாக ஆன்மீக வழியில் கொண்டாடியிருப்பது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

காதலர் தினமான நேற்று நடிகை அமலாபால் கோவையில் உள்ள ஈஷா தியான மையத்திற்கு தனது கணவருடன் சென்ற புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார்.

ஈஷா தியான மையத்தில் கணவரின் மடியில் படுத்து கொண்டு ஆழ்ந்த தியானத்தில் ஈடுபட்டிருந்த புகைப்படத்தை அமலாபால் பதிவு செய்துள்ளார்.

மேலும் இந்த பதிவில் ’காதலர் தினத்தன்று ஜகத் அவர்களின் இருப்பிடத்தில் நானும் எனது கணவரும் ஆழ்ந்த தியானம் மேற்கொண்டோம். ஈஷா மீதான ஆழ்ந்த அன்பை கொண்டாடினோம்.

அன்பு என்பது கொடுப்பது, பெறுவது, கவனிப்பது, பகிர்வது ஆகியவற்றை குறிக்கிறது. அன்பு என்பது மனம், உடல் மற்றும் ஆவியை சந்தோஷப்படுத்துகிறது.

இது பிரபஞ்சத்தின் மிகப்பெரிய பரிசு’ என்று அவர் குறிப்பிட்டுள்ளார் அமலாபாலின் இந்த பதிவும் அவர் பதிவு செய்துள்ள புகைப்படமும் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version