12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் சிறுமியின் அயலவர் மற்றும் உறவினர்கள் இருவர் மீகொடை பொலிஸாரால் நேற்று (16) கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் மீகொடை பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மீகொடை பிரதேசத்தை சேர்ந்த சிறுமியின் அயல் வீட்டில் வசிக்கும் இளைஞரொருவரும் சிறுமியின் உறவினர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த டிசம்பர் மாதம் சந்தேக நபர்கள் மூவரும் இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி இது தொடர்பில் தனது தாயிடம் தெரிவித்ததையடுத்து சிறுமியின் தாய் பொலிஸில் முறைப்பாடு வழங்கியுள்ளார்.

இது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக மீகொடை பொலிஸார் தெரிவித்தனர்.

Share.
Leave A Reply

Exit mobile version