திருநங்கை கொடூரமாகக் கொல்லப்பட்ட வழக்கில், 4 திருநங்கைகளை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர்.

சென்னையை அடுத்த பெரும்பாக்கம், தமிழ்நாடு நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புப் பகுதியில் வசித்து வந்தவர், சிமி (எ) சாதனா (21). திருநங்கையான இவர், கடந்த ஜனவரி மாதம் 25-ம் தேதி இரவு முதல் காணவில்லை.

அதனால் சிமியின் பெற்றோர் அவரைத் தேடிவந்தனர். அவரின் செல்போனும் சுவிட்ச் ஆஃப் என பதில் வந்ததால், சிமியைக் கண்டுபிடித்துத் தரும்படி செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் சிமியின் அம்மா புகாரளித்தார்.

அதன்பேரில் போலீஸார் வழக்கு பதிவுசெய்து விசாரித்தபோது, கடந்த ஜனவரி 28-ம் தேதி OMR சாலை செம்மஞ்சேரி பகுதியில் முட்புதரில் அழுகிய நிலையில் சிமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

இதையடுத்து செம்மஞ்சேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் மகுடீஸ்வரி தலைமையிலான போலீஸார், சிமி மரணம் குறித்து விசாரித்தனர். பிரேத பரிசோதனையில் சிமி கொலைசெய்யப்பட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.


திருநங்கை அபர்னா

இதையடுத்து சிமியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீஸார் ஆய்வு செய்தனர்.

அப்போது அங்கு நான்கு திருநங்கைகள் ஓடும் காட்சி பதிவாகியிருந்தது. அவர்கள் யாரென்று போலீஸார் விசாரித்து வந்தனர். விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

இது குறித்து போலீஸார் கூறுகையில், “கடந்த சில தினங்களுக்கு முன்பு கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக 5 திருநங்கைகள் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்களிடம் விசாரித்தபோதுதான் திருநங்கை சிமியை அபர்ணா (27), ஆனந்தி (35), ரதி (36), அபி (32) ஆகிய நான்கு திருநங்கைகளும் இணைந்து கொடூரமாகக் கொலைசெய்தது தெரியவந்தது. அதனால் அவர்களை சிமி கொலை வழக்கில் கைதுசெய்தோம்.

கொலைசெய்யப்பட்ட திருநங்கை சிமி

தொடர்ந்து அவர்களிடம் விசாரித்தபோது, இவர்கள் அனைவரும் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்திருக்கிறார்கள்.

அப்போது அவர்களில் சிமியை மட்டும் சிலர் விரும்பி அழைத்துச் சென்றிருக்கிறார்கள். அதனால் சிமிக்கும் மற்ற திருநங்கைகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது.

முன்விரோதமும் இருந்து வந்திருக்கிறது. சம்பவத்தன்று சிமியை மற்ற திருநங்கைகள் கொடூரமாகக் கொலைசெய்து, முட்புதரில் வீசிவிட்டு தப்பிச் சென்றிருக்கிறார்கள்.

அதனால்தான் சிமியின் சடலம் அழுகிய நிலையில் காணப்பட்டிருக்கிறது. தொழில் போட்டி காரணமாகத்தான் சிமி கொலைசெய்யப்பட்டிருக்கிறார். தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version