காசா யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும்வகையில் அமெரிக்க விமானப்படையை சேர்ந்த ஒருவர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு வெளியே தனக்குதானனே தீமூட்டிக்கொண்டார் என சர்வதேச ஊடகங்கள் செய்திவெளியிட்டுள்ளன.
உடனடியாக தீயை அணைத்த அமெரிக்க இரகசிய சேவையை சேர்ந்தவர்கள் அந்த நபரை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
தீக்குளிக்க முயற்சித்த நபர் தொடர்ந்தும் ஆபத்தான நிலையில் காணப்படுகின்றார் அவர் விமானப்படையை சேர்ந்தவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இராணுவசீருடையில் காணப்படும் அந்த நான் தொடர்ந்தும்இனப்படுகொலையுடன் தொடர்புபட்டிருக்க விரும்பவில்லை என தெரிவிக்கும் இணையவீடியோவொன்று வெளியாகியுள்ளது.
தன்மேல்எரிபொருளை ஊற்றி தனக்குதானே தீமூட்டிக்கொள்வதற்கு முன்னர் அந்த நபர் சுதந்திர பாலஸ்தீனம் என கோசமிட்டார் என டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
காசாவில் யுத்தம் ஆரம்பித்த பின்னர் வோசிங்டனில் உள்ள இஸ்ரேலிய தூதரகத்திற்கு முன்னால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.