உலகில் வித்தாயசமான சேட்டைகள் செய்வதில் இந்தியர்கள் எப்போதும் விசேஷமானவர்கள் எனலாம். செய்யும் எல்லாவற்றிலும் வித்தியாசத்திற்கு பழகி வரும் இந்தியர்கள் மத்தியில், சமூக வலைதள வீடியோ மூலம் வைரலானவர் டாலி (dolly) என்ற டீ மாஸ்டர்.

அணிந்திருக்கும் உடையில் துவங்கி, வாடிக்கையாளர்கள் கையில் டீ கிளாசை கொடுக்கும் வரை சுறுசுறுப்பு கொஞ்சம் ஓவர்டோசாகவே காணப்படுபவர் தான் டோலி.

தனது நேர்த்தியான டீ போடும் விதத்தால் பிரபலமானவர். டாலியின் உடல் பாவனை ரஜினிகாந்த் போன்று இருந்ததும் இவர் வைரலாக காரணமானது.

தற்போது டாலியின் கடைக்கு உலக பணக்காரர்களில் ஒருவரான பில் கேட்ஸ் வாடிக்கையாளராகி இருக்கிறார். டாலி டீ போடும் விதத்தை பார்க்கவும், அந்த டீ எப்படி இருக்கிறது என்பதை சுவைத்து பார்க்கவும் பில் கேட்ஸ் முடிவு செய்தார்.

இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பில் கேட்ஸ் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார்.

இதனிடையே பில் கேட்ஸ், டாலி கடையிலும் ஒரு டீயை வாங்கி சுவைத்தார். மேலும் இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாகிராமிலும் அவர் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், “எளிமையான ஒரு கப் தேநீரில் துவங்கி, இந்தியாவில் எங்கு திரும்பினாலும் புதுமையை பார்க்க முடியும்,” என்று குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

View this post on Instagram A post shared by Bill Gates (@thisisbillgates)

Share.
Leave A Reply

Exit mobile version