தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த ஜோதிகா தற்போது மும்பையில் குடியேறியுள்ள நிலையில், அவர் தீவிரமாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

1999-ம் ஆண்டு அஜித் சிம்ரன் நடிப்பில் வெளியான வாலி படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான ஜோதிகா, அடுத்து சூர்யாவுக்கு ஜோடியாக பூவெல்லாம் கேட்டுப்பார் என்ற படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.

தொடர்ந்து விஜய், அஜித் சூர்யா, விக்ரம், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வெற்றியை குவித்துள்ளார்.

கடந்த 2006-ம் ஆண்டு நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஜோதிகாவுக்கு 2 குழந்தைகள் உள்ள நிலையில், திருமணத்திற்கு பின் நடிப்பில் இருந்து விலகிய ஜோதிகா, 2015-ம் ஆண்டு வெளியான 36 வயதினிலே படத்தின் மூலம் ரீ-என்டரி கொடுத்தார்.

அதன்பிறகு ஜாக்பாட், ராட்சசி, நாச்சியார் என நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.

கடைசியாக தமிழில் கடந்த 2021-ம் ஆண்டு உடன்பிறப்பே படத்தின் நடித்திருந்த ஜோதிகா அதன்பிறகு மலையாளம் மற்றும் இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.

சமீபத்தில் மம்முட்டியுடன் இவர் நடித்த காதல் திகோர் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

தற்போது தனது கணவர் சூர்யா மற்றும் குழந்தைகளுடன் மும்பையில் செட்டில் ஆகியுள்ள ஜோதிகா, சமூகவலைதளங்களில் ஆக்டீவாக இருந்து வருகிறார்.

இதில் அவர் வெளியிடும் பதிவுகள் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில, தற்போது தான் கடுமையாக உடற்பயிற்சி செய்யும் வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இந்த பதிவில் உடற்பயிற்சி செய்வது உடல் எடையை குறைப்பதற்காக மட்டுமல்ல வாழ்க்கையை அதிகரிப்பதற்காக என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகிறது.

தற்போது இந்தி படங்களில் நடித்து வரும் ஜோதிகா, சைத்தான் என்ற ஹாரார் படத்தில் நடித்துள்ளார். இந்த படம் நாளை மறுநாள் (மார்ச் 8) வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version