• குந்தர் உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொள்வதோடு, படகு சவாரியையும், ஆடம்பர டின்னர்களையும் அனுபவிக்கிறார். மிகச்சிறந்த இறைச்சி, காய்கறிகள் மற்றும் அரிசியைக் கொண்டு காலையில் ஒரு தனியார் சமையல்காரரால் சமைக்கப்படும் உணவை உண்கிறார்.

உலகின் மிகப் பெரிய பணக்காரர்களையும் அவர்களின் சொத்து மதிப்புகளைக் குறித்தும் கேள்விப்பட்டிருப்போம். ஆனால், உலகின் பணக்கார நாயும் அதன் ஆடம்பர வாழ்க்கை குறித்தும் உங்களுக்குத் தெரியுமா?!

இவ்வளவு சொத்துகள் சொந்தமானது எப்படி?!

ஜெர்மனியைச் சேர்ந்த செல்வ சீமாட்டியான karlotta Leibenstein தனது மகனின் மரணத்திற்குப் பிறகு வாரிசு இல்லாமல் இருந்தார்.

1992-ல் அவர் இறக்கும்போது தனக்கென்று குடும்பம் இல்லாததால், தனது சொத்து முழுவதையும் பாசத்தோடு வளர்த்த நாயின் மீது எழுதி வைத்துள்ளார். அந்த நாய் குந்தரின் தாத்தா `Gunther III’ என்று கூறப்படுகிறது.

தன்னிடமிருந்த 80 மில்லியன் டாலர் சொத்து மதிப்புகளையம் மூன்றாம் குந்தருக்கு எழுதி வைத்தார். இந்த சொத்து மதிப்புகள் நான்காம் குந்தருக்கு மாற்றப்பட்ட போது, அந்த சொத்தினை நிர்வகித்த மவுரிசியோ மியான் அதிக முதலீடுகள் செய்தார். இந்த முதலீட்டின் மூலம் குந்தரின் சொத்து மதிப்பு அதிகரித்தது.

இத்தாலியைச் சேர்ந்த 66 வயதான மியான் லிபென்ஸ்டீனின் மகனின் நண்பர் என்றும், `இஸ்டிடுடோ ஜென்டிலி’ என்ற மருந்து நிறுவனத்திற்கு சொந்தமான இத்தாலிய குடும்பத்தில் இருந்து வந்தவர் என்றும் கூறப்படுகிறது.

மடோனாவும் குந்தரும்…

2000- ஆண்டுகளில் குந்தரை பராமரிக்கும் அறக்கட்டளை அமெரிக்க பாப் சிங்கர் மடோனாவின் மியாமி மாளிகையை 7.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு வாங்கியது. அதன்பின் 2021 நவம்பரில் அதனை 30 மில்லியனுக்கு விற்றது.

அந்த சமயத்தில் மடோனா தனது இன்ஸ்டா பக்கத்தில், “உங்கள் பழைய வீட்டை ஒரு நாய் நீங்கள் விற்றதை விட 3 மடங்கு விலைக்கு விற்கிறது என்பதை நீங்கள் கண்டறிந்தால்’’… என்று தலைப்பிட்டு பதிவிட்டார். இது பலரின் கவனத்தையும் பெற்றதோடு குந்தரை தலைப்பு செய்திகளில் இடம்பெற வைத்தது.

51,000 சதுர அடியுள்ள அந்த வீட்டில் ஒன்பது படுக்கையறைகள் மற்றும் 8 குளியலறைகள் உள்ளது. மிகவும் கலைநயத்தோடு கட்டப்பட்ட அந்த வீடு மியாமி கடற்கரையில் இருந்து சில நிமிட தூரத்தில் அமைந்துள்ளது.

ஆறாம் குந்தர் உலகம் முழுவதும் பயணங்களை மேற்கொள்வதோடு, படகு சவாரியையும், ஆடம்பர டின்னர்களையும் அனுபவிக்கிறார். மிகச்சிறந்த இறைச்சி, காய்கறிகள் மற்றும் அரிசியைக் கொண்டு காலையில் ஒரு தனியார் சமையல்காரரால் சமைக்கப்படும் உணவை உண்கிறார்.

குந்தரை மையமாக வைத்து `Gunthers Millions’ என்ற ஆவணப்படத்தை நெட்பிளிக்ஸ் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version