எலபாத்த, நிரியெல்ல பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாகக் கணவரால் மனைவி கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாகக் கணவன் – மனைவி இருவரும் தனித்தனி வீடுகளில் வசித்து வந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) உயிரிழந்த பெண் குழந்தைகளை அழைத்து வருவதற்காகக் கணவரின் வீட்டிற்குச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

40 வயதுடைய பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் 43 வயதான கணவன் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version