யாழ்ப்பாணம் – வடமராட்சி பகுதியில் நியூமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (10) உயிரிழந்துள்ளார்.

துன்னாலை வடக்கு, கரவெட்டியை சேர்ந்த முத்துலிங்கம் சிவதர்ஷன் என்ற
29 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் அவரது வீட்டில் வைத்து திடீரென மயங்கி விழுந்துள்ளதுடன்
அவரை வீட்டாரால் மீட்கப்பட்டு , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது நிமோனியாவே உயிரிழப்புக்கு காரணம் என தெரியவந்துள்ளது .

Share.
Leave A Reply

Exit mobile version