இந்த ஆண்டு ஜனவரி 01 முதல் மார்ச் 12 வரை இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 30 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 14 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் டிஐஜி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் 17 சம்பவங்கள் நாட்டில் இயங்கி வரும் திட்டமிட்ட குற்றக் கும்பல்களால் நடத்தப்பட்டவை எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

எஞ்சிய 13 துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் தனிப்பட்ட தகராறு காரணமாக இடம்பெற்றுள்ளதாக டிஐஜி தல்துவ மேலும் தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version