காஸாவில் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துவதில் இஸ்ரேலும் ஹமாஸும் இன்னும் நெருங்கிவரவில்லை என பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் வகிக்கும் கட்டார் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
காஸாவில் போர் நிறுத்ததை ஏற்படுத்துவதற்காக அமெரிக்கா, கட்டார், எகிப்து ஆகிய நாடுகள் பலவாரங்களாக முயன்றன.
இதற்காக எகிப்திய தலைநகர் கெய்ரோவில் பேச்சுவார்ததைகள் நடைபெற்றன.
புனித ரமழானுக்கு முன்னர் போர் நிறுத்தத்தை ஏற்படுத்துதற்கு தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், அம்முயற்சிகள் பலனளிக்கவில்லை.
இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான இணக்கப்பாட்டை நாம் நெருக்கவில்லை என கட்டார் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்
இணக்கப்பாட்டை ஏற்படுத்தும் முயற்சிகள் தொடர்கின்றபோதிலும், அதற்கான போர்நிறுத்தத்துக்கான காலவரம்பு எதனையும் கூற முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, ஒக்டோபர் 7 ஆம் திகதி முதல் காஸாவில் யுத்தத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 31184 ஆக அதிகரித்துள்ளது என காஸா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.