கட்டுநாயக்க விமான நிலையத்தில் , சீனப் பெண் ஒருவர் தனது மகளை இதுவரை பராமரித்து வந்த இலங்கைப் பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டுத் தப்பி சென்ற முயன்றபோது கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸாரினால் நேற்று செவ்வாய்க்கிழமை (12) கைது செய்யப்பட்டுள்ளார் .

குறித்த 35 வயதுடைய சீன பெண் , இவர் தனது 58 வயது தாயுடன் துபாயில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளதாகவும் இவர் ஒரு சீன பிரபல நடனப் பெண் எனவும் அவருக்கு 3 வயது 6 மாத வயதுடைய இரண்டு மகள்மார்கள் உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர் .

குருணாகல் பகுதியில் வசிக்கும் 53 வயதுடைய இந்த இலங்கைப் பெண், சீனப் பெண்ணின் துபாயில் உள்ள வீட்டில் தொழில் புரிந்துள்ளதுடன் அவரது பிள்ளைகளையும் பராமரித்து வந்துள்ளார். இவர் தனது சேவையை முடித்துக் கொண்டு அண்மையில் இலங்கை திரும்பியுள்ளார்.

இந்த நிலையில் குறித்த சீன பெண் இவருடை வீட்டில் பணியாற்றிய இலங்கைப் பெண்ணிடம் தொடர்புகொண்டு , தான் இலங்கைக்கு விஜயம் செய்யவதாகவும் , அவர்களை அழைத்துச் செல்ல கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருமாறும் கூறியுள்ளார்.

இந்நிலையில், இலங்கை பணி பெண் சீன பெண்ணை பார்ப்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில், இந்த சீனப் பெண், அவரது தாய், அவரது இளைய மகள் அனைவரும் துபாயிலிருந்து விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சிறிய நேரத்திலே இந்த சீனப் பெண், தனது இளைய மகளை இலங்கை பணிப்பெண்ணிடம் ஒப்படைத்துவிட்டு விமான நிலையத்திலிருந்து காணாமல் போயுள்ளதாக தெரிய வந்துள்ளது .

இதனையடுத்து துபாய் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த சீன பெண்ணையும் அவரது தாயையும் கட்டுநாயக்க பொலிஸார் கைது செய்துள்ளதுடன் இவர்கனை நீர்கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version