வீதியில் குறுக்கே சிறுத்தை ஓடியதால் வேன் விபத்துக்குள்ளானதில் அதில் பயணித்த இருவர் காயங்களுக்குள்ளானதாக நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து இன்று புதன்கிழமை (13) அதிகாலை கினிகத்தேன நோர்டன் பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

வெல்லவாய பிரதேசத்தில் இருந்து சிவனொளிபாதமலைக்கு யாத்திரைக்காக சென்ற சிலர் யாத்திரை முடிந்து வீடு திரும்பும் போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது .

இந்த விபத்தில் வேன் பலத்த சேதமடைந்துள்ளதுடன் வேன் விபத்துக்குள்ளாகும் காட்சி அருகில் உள்ள கடையின் ஒன்றில் பொருத்தப்பட்டுள்ள சிசிரிவி கெமராவில் பதிவாகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version