பொத்துவில், மணல்சேனை, கோமாரி பகுதியில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவர் காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (14) காலை இடம்பெற்றுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,
கோமாரி பகுதியில் இரண்டு இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் மோட்டார் சைக்கிளில் சென்ற போது யானை தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார்கள்.
இந்நிலையில், காயமடைந்தவர்கள் 1990 என்ற அவசர நோயாளர் காவு வண்டி மூலம் பொத்துவில் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோது ஒரு சுற்றுலா பயணி உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் இத்தாலிய சுற்றுலாப் பயணியான 50 வயதுடைய ஜிஞ்சினோ பாலோ என்பவர் என தெரியவந்துள்ளது.
சடலம் பிரேத பரிசோதனைக்காக அம்பாறை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அத்தியட்சகர் வெஹித தேவபியவின் பணிப்புரையின் பேரில் பொத்துவில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமல் செனவிரத்ன மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்.