சென்னை: நடிகை நதியா மலையாள நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது பிரபல நடிகர் முகேஷ் முத்தம் கொடுத்து விடுவேன் என்று மிரட்டியது குறித்து வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அதோடு முகேஷை பார்க்கும்போது எல்லாம் தான் உதட்டை மூடிக்கொண்டு ஓடிவிடுவேன் என்றும் கூறியிருக்கிறார்.

நடிகை நதியாவின் உண்மையான பெயர் சரீனா அனுஷா மோய்டு தானாம். இவர் 1984 ஆம் ஆண்டில் பூவே பூச்சூடவா என்ற திரைப்படத்தின் மூலமாக திரைப்படங்களில் கதாநாயகியாக அறிமுகம் ஆகி இருக்கிறார்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாள திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். முதல் திரைப்படத்திலேயே எதார்த்தமான அழகால், அதிகமான மேக்கப் இல்லாத பக்கத்து வீட்டு பெண் போன்ற இவருடைய எளிமையான கேரக்டரால் ரசிகர்களை அதிகமாக கவர்ந்து விட்டார்.

அப்போது தொடங்கிய அதே அழகு இப்ப வரைக்கும் அவரிடம் விட்டு விலகவில்லையே என்று இப்ப வரைக்கும் ரசிகர்கள் பலர் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

பல்வேறு ஹிட் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்துக் கொண்டிருந்த நதியா ஆரம்ப காலகட்டத்தில் எந்த பொருளை எடுத்தாலும் இது நதியா பொருள் என்று சொல்லும் அளவிற்கு பிரபலமாகிவிட்டார்.

உதாரணமாக நதியாவின் வளையல், நதியா செருப்பு, நதியா புடவை, நதியா பெண்கள் சைக்கிள் என்று சொல்லும் வகையில் ரசிகர்களின் மனதை கவர்ந்திருந்தார்.

இந்த நிலையில் சில வருடங்களாக இவர் திரைப்படங்களை விட்டு விலகி இருந்து தற்போது நீண்ட இடைவெளிக்குப் பிறகு எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி என்ற திரைப்படத்தின் மூலமாக மீண்டும் அறிமுகமாகி இருக்கிறார்.

இவருடைய இரண்டாவது இன்னிங்ஸ் எதிர் பார்க்காத அளவில் இவருடைய பெயரை மீண்டும் பறக்க செய்து விட்டது. நடிகையாக இருக்கும் இவர் 2008 ஆம் ஆண்டு ஆரோக்கியா பால் மற்றும் தங்கமயில் ஜுவல்லரியின் பிராண்டட் தூதராக கையெழுத்துட்டு இருக்கிறார்.

ஜெயா டிவியில் நடிகை குஷ்புவுக்கு பதிலாக ஜாக்பாட் என்ற பிரபலமான தொலைக்காட்சி நிகழ்ச்சியை நதியா தொகுத்து வழங்கி சின்ன திரையிலும் பிரபலமாகி விட்டார்.

கதாநாயகியாகவே பார்த்துக் கொண்டிருந்த இவரை இப்போது துணை கதாநாயகியாக பார்த்தாலும் இதுவும் அழகாகத் தான் இருக்கிறது.

இவருடைய அழகுக்கு மட்டும் வயதே ஆகாதா என்று இப்பிருக்கும் இளைஞர்கள் வரை இவரிடம் டிப்ஸ் கேட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இந்த நிலையில் நடிகை நதியா தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் போது சமீபத்தில் மலையாள தொலைக்காட்சி சேனலில் ஒளிபரப்பாகும் ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு இருக்கிறார்.

அந்த நிகழ்ச்சியை நடிகர் முகேஷ் தான் நடத்தி வருகிறார். அப்போது முகேஷ் குறித்து அந்த நிகழ்ச்சியில் நதியா சில விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார்.

அதில் அவர் பேசுகையில் 1986 ஆம் ஆண்டு சாமா என்ற படத்தில் தான் நான் முகேஷை முதல் முறை சந்தித்தேன்.

இந்த படத்தில் நான் முகேஷ் உடன் சேர்ந்து நடித்தேன். முகேஷ் சிரிக்காமல் ஜோக் அடிப்பதில் ரொம்பவே வல்லவர்.

சூட்டிங்கில் சில நாட்களில் நான் முகேஷ் காமெடிக்கு ரசிகையாகி விட்டேன். சூட்டிங் வந்தாலே முகேஷ் எங்கே இருக்கிறாரோ அங்கே தான் நானும் இருப்பேன்.

இதனால் மற்றவர்களுக்கு முகேஷ் மீது கடுப்பு. அதுபோல முகேஷ் ஒரு நாள் ஜோக் அடித்துக் கொண்டிருக்கும் போது நான் ஒரு நாள் சிரித்துக் கொண்டிருந்தேன்.

அந்த நேரத்தில் நான் என்னையும் அறியாமல் அவரைப் பார்த்து “யூ ஆர் குட் ஜோக்கர்” என்று சொன்னேன். அதைக் கேட்டு பக்கத்தில் இருந்தவர்கள் எல்லோரும் சிரித்தார்கள்.

அப்போது முகேஷ் முகம் மாறிவிட்டது. அதை நான் கவனித்தேன்.  அதனாலயே அவரை சீண்டி பார்ப்பதற்காக அவரை பார்க்கும் போதெல்லாம் ஜோக்கர் என்று சொல்லி வெறுப்பேற்றிக் கொண்டிருந்தேன்.

ஒரு நாள் முகேஷ் என்னை கூப்பிட்டு எப்ப பார்த்தாலும் ஜோக்கர்னு கூப்பிட்டே இருக்க இனி அப்படி கூப்பிட்டா உனக்கு முத்தம் கொடுக்குதுடுவேன்னு சொன்னார்.

அதனால் நான் பயந்து போய் அவர்கிட்ட போகவே இல்லை. அப்போது அவர் இனி என்னை ஜோக்கர்னு சொல்லு பாப்போம் என்று வம்பு இழுத்தார்.

அப்போ நான் என்னுடைய உதட்டை மூடிக்கொண்டு ஓடிவிட்டேன். ஆனால் கடைசி நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு நான் காரில் ஏறியதும் வெளியே தலையை நீட்டி “ஜோக்கர்” என்று முகேஷை பார்த்து கத்திவிட்டு போனேன். என்று அந்த பேட்டியில் நடிகை நதியா பேசியிருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version