காசாவின் கடற்பகுதிக்கு சென்றுள்ள முதலாவது மனிதாபிமான கப்பல் மனிதாபிமான பொருட்களை தரையிறக்கியுள்ளது.

ஸ்பெயினை சேர்ந்த ஓபன் ஆர்ம்ஸ் என்ற கப்பலே காசாவின் கரையோரபகுதிக்கு சென்றுள்ளது.

பட்டினியின் பிடியில் காசா சிக்குண்டுள்ளதாகஐநா எச்சரித்துள்ள நிலையில் சைப்பிரசிலிருந்து இந்த கப்பல் 200 தொன் மனிதாபிமான பொருட்களுடன் செவ்வாய்கிழமை புறப்பட்டது.

தற்காலிகமாக உருவாக்கப்பட்ட ஜெட்டிகளை பயன்படுத்தி கிரேன்களில் இருந்து பொருட்கள் இறக்கப்பட்டு லொறிகளில் ஏற்றப்படுவதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

காசாவிற்குள் தரைமார்க்கமாகவும் ஆகாயமார்க்கமாகவும் மனிதாபிமான பொருட்களை விநியோகிப்பது கடினமானதாக காணப்படுகின்ற நிலையில் இந்த முயற்சி இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

உணவுகளை வழங்கிய வேர்ல்ட் சென்ரல் கிட்ச்சன் ஐக்கிய அரபு இராச்சியத்தின் உதவியுடன் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளது.

காசாவில் இயங்கும் துறைமுகம் இ;ல்லாததால் தற்காலிக இறக்குதுறையொன்று உருவாக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் உணவு விநியோகம் எவ்வாறு இடம்பெறும்என்பது குறித்த விபரங்கள் வெளியாகவில்லை.

12 லொறிகளில் பொருட்கள் ஏற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share.
Leave A Reply

Exit mobile version